நூலாசிரியர்: எல். எஸ். கரையாளர்
பக்கங்கள்: 192
முதல் பதிப்பு: 1941
இந்த மறுபதிப்பு: அக்டோபர் 2021
சிறையில் இருந்த மனிதர்களை வேடிக்கை கலந்து அறிமுகம் செய்கிறார் கரையாளர். அவருக்கு சிறை என்பதே முகங்களாகத்தான் இருக்கிறது. இந்தச் சுயசரிதைக் குறிப்பின் முக்கியத்துவம் என்னவென்றால் இதில் ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கோட்டுச் சித்திரங்கள் உள்ளன என்பதே. அவர்களில் பலர் இப்போது தடயமே இல்லாமல் வரலாற்றில் மறைந்துபோய்விட்டார்கள். ‘திருச்சி ஜெயில்’ ஒரு விசித்திரமான நூல். வதைகளைப் பற்றியது. ஆனால் உல்லாசமாக எழுதப்பட்டிருக்கிறது.
- ஜெயமோகன்